கிச்சன் டிப்ஸ்

* தோசைக்கு அரைக்கும்போது கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்து தோசை சுட்டுப் பாருங்களேன். புது  சுவையாக இருக்கும்.

* ரசத்துடன் சிறிது மட்டன் சூப்பைச் சேர்த்தால் ரசம் ருசியாக இருக்கும்.
Advertising
Advertising

* தேங்காயைத் துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து விடுங்கள், பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் சில  விநாடிகள் சுற்றினால், துருவியது போலவே பூப்பூவாக வந்து விடும்.

* இரவு மீந்த ஒரு கப் சாதத்தை மிக்சி ஜாரில் போட்டு, கூடவே மூன்று டீஸ்பூன் கடலை மாவு, மூன்று டீஸ்பூன் அரிசி மாவு, தேவையான  உப்பு சேர்த்து, மோர் விட்டு தோசை மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

* காய்கறிகள் வதங்கி போய்விட்டால் தூக்கி எறியாமல் அதில் சில துளி எலுமிச்சை பழச்சாறு பிழிந்துவிட்டால், சில மணி நேரத்தில் காய்கறிகள் வதங்கிய தன்மை மாறி புதியதாக பளிச்சென்று இருக்கும்.

* பலகாரங்கள் நமுத்துப் போகாமலிருக்க அவை வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடியில் உப்பு பொட்டலம் ஒன்றை போட்டு வைக்கவும்.

* வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கி விடும்.

* வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பும், கரையும் வராது.

* பஜ்ஜி செய்யும் வாழைக்காய், உருளைக்கிழங்கு வில்லைகளை மிளகாய்பொடி, உப்புடன் கலந்து 1/2 மணி நேரம் வைத்திருந்து, பின் பஜ்ஜி மாவில் போட்டு செய்தால் பஜ்ஜி சுவையாய் இருக்கும்.

* டேஸ்ட்டான கேக்குக்கு கேக் செய்யும் போது கலவையில் சிறிதளவு தேன் சேர்த்தால் கேக் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

* ஒரு கப் உளுத்தம்பருப்புக்கு 2½ கப் பச்சரிசியை கருகாமல் வறுத்து ஊறவைத்து பிறகு அரைத்தால் இட்லி பஞ்சு போல இருக்கும்.

* புலாவ் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை

புலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல் பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.

* இருபது ஏலக்காயுடன் நான்கு ஸ்பூன் கசகசா சேர்த்து  கடாயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாயசம்  மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் போது இந்த பொடியை  சேர்த்தால் வாசனையாக இருக்கும்.

* எந்த மாவாக இருந்தாலும் சரி, அதில் பூச்சி பிடிக்காமலிருக்க மூன்று அல்லது நான்கு காய்ந்த  மிளகாயைப் போட்டு வைத்தால் மாவில் பூச்சிப்  பிடிக்காது.

* ரவா அல்லது சேமியா கிச்சடி எதுவாக இருந்தாலும் சரி. கிளறி இறக்கும் முன் மிகப் பொடியாக அரிந்த தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி  1 நிமிடம் மூடி பரிமாற கிச்சடி நிறம் மாறாமலும் தக்காளி சற்றே மெத்தென்றும் இருக்கும்.

* மைதா பர்பி, தேங்காய் பர்பி போன்றவற்றை செய்யும் போது பதம் வந்து தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடும் முன் டூட்டி ஃப்ரூட்டியைத்  தூவினால் ரத்ன கல் பதித்தது போல் கண்ணைக் கவரும்.

* குளிர்ந்த நீரில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து அதில் உலர்ந்த காய்கறிகளை ஒரு மணி நேரம் போட்டு வைத்தால் காய்கறிகள் புதிதுபோல் ஆகிவிடும்.

Related Stories: