×

நிலக்கடலைக்கு எது சொந்த ஊர்?

நிலக்கடலை பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களால் உண்ணப்பட்டு வரும் உணவுப்பொருள். நமக்கு வேர்க் கடலை அறிமுகமானது கடந்த நூற்றாண்டுகளில்தான்.  வேர்க்கடலை, மணிலாக்கடலை, மல்லாட்டை, மணிலாக் கொட்டை, கடலை முத்து எனப் பல பெயர்களில் வழங்கப் படும். இதன் தாவரவியல் பெயர் அரேகிஸ் ஹைபோஜியா. இதன் பூர்விகம் தென் அமெரிக்க கண்டம்தான். ஏழாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே நிலக்கடலையை தென் அமெரிக்கர்கள் சாகுபடி செய்திருக்கிறார்கள். வடமேற்கு அர்ஜென்டினாவில் தொடக்கத்தில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் பின்னர் அங்கிருந்து பெரு, ஈக்வடார், பொலிவியா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கும் பரவியது.

இன்று நிலக்கடலையை சீனா, இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகளும் அதிகமாக சாகுபடி செய்து வருகிறது. அதிலும் சீனாதான் இதை மிக அதிகமாக உற்பத்தி செய்கிறது. கடந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி ஐம்பது டன். இதில் சுமார் முப்பத்தெட்டு சதவீதத்தை சீனாவே சாகுபடி செய்துள்ளது. நிலக்கடலையில் மாவுச்சத்தும், கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளன. இதைத் தவிர பொட்டாசியம், கால்சியம், மக்னீஷியம் போன்ற தாது உப்புக்களும் நிறைந்துள்ளன. நிலக்கடலை பசியை அடக்கும். இதயத்தை வலுவாக்கும். உடலில் கொழுப்பை பெருக்கி எடை கட்டுப்பாட்டுக்கு உதவும்.



Tags : groundnut , நிலக்கடலை
× RELATED மண்புழு உரத்திற்கு அமோக வரவேற்பு...