மசாலா பீநட்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். அதனுடன் வேர்க்கடலையை கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் பொரிக்க எண்ணெயை ஊற்றி நன்கு சூடானதும் முதலில் கறிவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும். பிறகு வேர்க்கடலை கலவையை உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து கறிவேப்பிலையுடன் கலந்து பரிமாறவும்.