சிவப்பு ராஜ்மா சுண்டல்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

ராஜ்மாவை 10 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து கொள்ளவும். வெறும் கடாயில் கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து, ஆறியதும் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து வெந்த ராஜ்மா, அரைத்த பொடியை தூவி கலந்து பரிமாறவும். குறிப்பு: கிராமங்களில் கிடைக்கும் ருசியும், சத்தும் நிறைந்த சிறு ராஜ்மாவிலும் செய்யலாம்.