கவர்ச்சி தரும் நக அழகு

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

வாசகர் பகுதி

கடவுள் பெண்களின் ஒவ்வொரு உடல் உறுப்பிலும் ஒவ்வொரு விதமான அழகைப் படைத்திருக்கிறான். பெண்களின் கைவிரல்களும், விரல்களில் அமைந்துள்ள நகங்களும் பெண்களுக்குத் தனித்து ஒரு எழிலையும், கவர்ச்சியையும் அளிக்கின்றன.

* நகங்களை அழகுபடுத்துவதற்கான முதல் நிலை அவற்றை சீராக வெட்டவேண்டும்.

* நீண்ட விரல்களைப் பெற்ற பெண்கள், நகங்களை விரல்களோடு ஒட்டியிருக்கும் வண்ணம் வட்ட வடிவமாக வெட்டிவிட்டால்

அழகாக இருக்கும்.

* குட்டையான விரல்களைக் கொண்ட பெண்கள் கைவிரல்களைவிடச் சற்று நீளமாகக் கூம்பிய வடிவில் நகங்களை வெட்டி விட்டால் அமைப்பாக இருக்கும்.

*  குட்டையான விரல் அமைப்பினைப் பெற்ற பெண்கள் நகங்களின் மையப் பகுதியை உள்ளிறங்கும் விதமாகச் சந்திர பிம்பம்போல வெட்டி விட்டால் அழகாக, கவர்ச்சியாக இருக்கும்.

* பாதாம் எண்ணெயை விரல் நகங்களில் தளரப்பூசி, அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு உடலை மாவினால் கழுவி சுத்தம் செய்து வந்தால் நகங்கள் நல்ல பிரகாசமாக காட்சியளிக்கும்.

* பாலைக் கொதிக்க வைத்து, இறக்கி, பொறுக்கும் சூடாக இருக்கும்போது நகங்களை அதில் படுமாறு நனைத்து, பின்பு சுத்தமான பஞ்சைக் கொண்டு நகங்களை நன்கு தேய்த்து, பாலிஷ் செய்தால் நல்ல பளபளப்பைப் பெற்று, பெருசாக தோற்றமளிக்கும்.

* பூந்திக் கொட்டையை வாங்கி, தண்ணீரில் ஊற வைத்து தேய்த்தால் சோப் நுரைபோல் வரும். அந்த நுரையைக் கொண்டு நகங்களை சுத்தம் செய்தால் நகங்கள் பளிச்சென்று பளபளக்கும்.

-அ.திவ்யா, காஞ்சிபுரம்.

Related Stories: