கொரோனா பிடியில் சிக்காமல் தப்புவது எப்படி?

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பொது சுகாதாரத்திற்கு பெரும் தீங்காக அமைந்துள்ளது. அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், புதிய வைரஸ் 2019-nCoV என அழைக்கப்பட்டது. பின்னர், வைரஸ்கள் வகை பிரித்தல் தொடர்பான சர்வதேச குழுவின் (ஐ.சி.டி.வி) நிபுணர்கள் இது SARS-CoV-2 வைரஸ் என்று கூறியது. உலக சுகாதார அமைப்பு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ‘’கோவிட்-19’’ பெருந்தொற்று நோய் என அறிவித்தது. SARS-CoV-2 பீட்டா CoVs வகையை சேர்ந்தது. பொதுவாக, கொரோனா வைரஸ்கள் 60 nm முதல் 140 nm வரை விட்டம் கொண்ட அதன் பரப்பளவில் கணிப்புகள் போன்ற ஸ்பைக் கொண்ட எலக்ட்ரான் நுண்ணோக்கியின் கீழ் கிரீடம் போன்ற தோற்றத்தை அளிக்கின்றன.

எனவே, கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் என்பது பெரிய குடும்பம் ஆகும். இது, வெவ்வேறு விலங்கு இனங்களில் சுவாச, நுரையீரல், கல்லீரல் மற்றும் நரம்பியல் நோய்களை ஏற்படுத்தும். HKU1, NL63, 229E மற்றும் OC43 ஆகிய நான்கு வகை கொரோனா வைரஸ்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை. அவை, சுவாச நோயை ஏற்படுத்துகின்றன. கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதலில் காய்ச்சலாகவும், பின்னர் வறட்டு இருமலாக மாறும். 5 முதல் 7 நாட்களுக்கு பின், பலவீனமான நுரையீரல் செயல்பாடு கொண்ட முதியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.

அதேசமயம் இளைஞர்களுக்கு, அடிப்படை சுவாச கோளாறுகளுக்கு அழற்சி தூண்டப்பட்டு, நுரையீரல் காயத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து, சுவாச செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், 1 முதல் 2 வாரங்களுக்கு, ‘செயற்கை சுவாசம்’ பரிந்துரைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று, ஒருவர் தும்முதல், இருமுதல் மூலம் வெளிவரும் நீர்த்துளிகளை மற்றொருவர் உள்ளிழுக்கப்படுவதன் மூலம் அல்லது அவற்றால் மாசுபடுத்தப்பட்ட மேற்பரப்புகளை தொடுவதன் மூலம் பரவுகிறது. மேலும், மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடுவதன் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ், மலம் மற்றும் நீர் மாசுபடுதலிலும் உள்ளது.

இந்நோய் தாக்கிய நபர்களின், நாசி குழியில் அதிக வைரஸ் இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் உயிர் வாழும் காலம் 2 முதல் 14 நாட்கள் வரை ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்ட நீர்த்துளிகள் 1 முதல் 2 மீட்டர் வரை பரப்பளவில் பரவுகின்றன. வைரஸ் டெபாசிட் ஆனவுடன், அவை சாதகமான, சாதாரண வெப்பநிலை/வளிமண்டல நிலைமைகளில் பல நாட்கள் தொற்றுநோயை பரப்பும் தன்மை கொண்டது. பொதுவாக தலைவலி, காய்ச்சல், இருமல், உமிழப்பட்ட எச்சில், தொண்டைப்புண், மூச்சுத்திணறல், சோர்வு, உடல்நலக்குறைவு அல்லது மார்பு இறுக்கம் மற்றும் டிஸ்போனியா தசைவலி, கோரிஸா போன்ற மேல்சுவாச குழாய் அறிகுறிகள், சுவாச குழலில் இருந்து ரத்த வெளியேற்றம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை மிகவும் பொதுவான அறிகுறிகளாகும்.

சர்க்கரை, உயர் ரத்தஅழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள், கொரோனா வைரஸால் அதிக ஆபத்தை சந்திப்பார்கள். முதியோர்களுக்கு இந்த நோய் தொற்று வந்தால், ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 4 முதல் 11 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கை

* கடுமையான சுவாச நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன், நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும்.

* குறிப்பாக, பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புகொள்ள நேரிட்டால், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். பண்ணை அல்லது காட்டு விலங்குகளுடன் பாதுகாப்பற்ற தொடர்பை தவிர்க்க வேண்டும்.

* கடுமையான நோய் தொற்றின் அறிகுறிகள் உள்ளவர்கள் தனித்திருக்க வேண்டும். இருமல் அல்லது தும்மும்போது கைகளால் மூடிக்கொள்ள வேண்டும். பின்னர், கைகளை கழுவ வேண்டும்.

* நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் பொதுவெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

* கைகளை அடிக்கடி கழுவி, கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். அசுத்தமான சூழலுக்கு சென்று திரும்பினால் முகம் மற்றும் வாய் பகுதிகளை கைகளால் தொடக்கூடாது.

* எல்லா நேரங்களிலும், மற்றவர்களிடமிருந்து 6 அடி தூரத்தில் இருப்பது நல்லது.

* வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கை, கால், முகம் என அனைத்து பாகங்களையும் கழுவ வேண்டும்.

* கொரோனாவை வெல்லும் தற்போதைய ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. இதை, முறைப்படி, உரிய கால இடைவெளியில் செலுத்திக்கொள்வது நல்லது.

Related Stories: