முடித்து வைக்கப்பட்டதை மீண்டும் கிளறுகிறது ஆந்திர முதல்வர் மீது 11 வழக்குகள் பதிவு: தாமாக முன்வந்து ஐகோர்ட் நடவடிக்கை

விஜயவாடா: ஆந்திர முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 2016ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அமராவதி நிலம் மோசடி மற்றும் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மீது அனந்தபூர், குண்டூர் மாவட்ட கீழ் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை நீதிமன்றங்கள் சமீபத்தில் தள்ளுபடி செய்தன.  இது சர்ச்சை ஆனதால், இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து ஜெகன் மோகன் ரெட்டி மீது 11 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பான விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஸ்ரீராம், இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், யாருக்கும் நோட்டீஸ் அனுப்பாமல், விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்திவைத்தார்.

Related Stories:

>