முதல் டி20 ஆட்டம் இங்கிலாந்து வெற்றி

கார்டிப்: இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில்  இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு  தலா 3 டி20, ஒருநாள்  போட்டிகளில் விளையாடுகிறது.   இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முடிந்த  முதல் டி20  ஆட்டம்  கார்டிப் நகரில் நடநத்து. டாஸ் வென்று முதலில்  களமிறங்கிய இலங்கை  20ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 129ரன் எடுத்தது.  அதிகபட்சமாக தசுன் ஷாங்கா 50ரன் எடுத்தார். அடில் ரஷீத், சாம் கரன் ஆகியோர் தலா 2  விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து 130ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  இங்கிலாந்து விளையாடியது.

அந்த அணி  17.1 ஒவரில் 2 விக்கெட்களை மட்டும்  இழந்து 130 ரன் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.  அந்த அணியின் ஜோஸ் பட்லர்  ஆட்டமிழக்கமல் 68ரன் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories: