ஏன் வெற்றி , தோல்வி? கருத்து சொல்றாங்கப்பா கருத்து

சென்னை: முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்  ஆகியிருக்கிறது நியூசிலாந்து.  ஒருநாள் உலக கோப்பை  தொடர் நடக்கும் போதெல்லாம் கோப்பையை வெல்ல வாயப்பு உள்ள அணியாக நியூசிலாந்து இருக்கும். அதிலும் 2019ம் ஆண்டு உலக கோப்பையில்  இறுதிப்போட்டி வரை சென்று 2வது சூப்பர் ஓவரிலும் டை ஆன நிலையில் பவுண்டரிகள் நியூசிலாந்துக்கு ஏமாற்றத்தை தந்தன. இப்படி டி20, ஒருநாள் உலக கோப்பைகளையும், சாம்பியன் டிராபிகள் எதையும் நியூசிலாந்து வென்றதில்லை. அந்த வரலாறு இப்போது மாறியிருக்கிறது. கூடவே உலகின் சிறந்த வீரர்களை கொண்ட இந்திய அணி  கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா தோற்றதற்கு  மழை, டாஸ் என பல காரணங்கள் இருக்கின்றன.

‘வீரனுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம்’ என்றாலும்  விமர்சனங்களுக்கும், பாராட்டுகளுக்கும் பஞ்சம் இருக்காது.  அந்த வரிசையில் கிரிக்கெட் பிரபலங்களின் கருத்துகள்...சச்சின டென்டுல்கர் ஜேமிசன் பந்து வீச்சில் 10 பந்துகளில்    கோஹ்லி, புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. ரிச்சர்டு ஹாட்லி(நியூசிலாந்து)  முழு நியூசிலாந்து அணியும்  தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இப்போது உள்ள அணிதான் சிறந்த அணி. மதன்லால்  இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும்  போட்டியை டிராவாவது  செய்யலாம் என்ற முனைப்புடன்  விளையாடவில்லை. களத்தில் வீரர்களை  எப்படி வழி நடத்த வேண்டும் என்பதை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தி  உள்ளார்.

விராத் கோஹ்லி  இறுதிப்போட்டியை 3 டெஸ்ட்கள் கொண்ட தொடராக நடத்தியிருக்கலாம். ஒரு டெஸ்ட் மூலம் சாம்பியனை தேர்வு செய்வது சரியானதல்ல.  நாங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளரை ஆல்ரவுண்டராக களமிறக்கி வேண்டும். பேட்ஸ்மேன்களுக்கும்  வெற்றிப் பெற வேண்டும் என்ற துடிப்பு வேண்டும். இனி வரும் தொடர்களில் இவை கருத்தில் கொள்ளப்படும். மாற்றம் காலத்தின் கட்டாயம். மைக்கலே் வாஹன்(இங்கிலாந்து) டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3டெஸ்ட்களாக கொண்ட தொடராக நடத்த தேவையில்லை. அது இறுதிப்போட்டிக்கான இயல்போடு இருக்காது.  ஒரே ஒரு ஆட்டத்தில் வீரர்கள் எப்படி தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதுதான், அந்த  ஆட்டத்தை சிறப்பானதாக மாற்றும்.

டேல் ஸ்டெயின்(தென் ஆப்ரிக்கா)  சிறந்த வீரரான புஜாரா தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.  முன்னங்காலில் நின்று ஆடும் போது,  அவரால்  ரன் எடுக்க முடியவில்லை. ஹர்பஜன் சிங் இறுதிப்போட்டியில் விளையாடும் வகையில் நியூசிலாந்து தன்னை தயார் செய்திருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பே அவர்கள் இங்கிலாந்து சென்று விட்டனர். இறுதிப்போட்டிக்கு முன்பு இங்கிலாந்துடன் விளையாடிய ஒரு டெஸ்ட்,  அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக இருந்தது. கேன் வில்லியம்சன்(நியூசிலாந்து) வலுவான இந்திய அணியை வெல்வது சவால் என்பதை உணர்ந்திருந்தோம். இந்த வெற்றி என்றும் மறக்க முடியாது. இரண்டு முறை(யு19, ஒருநாள்)  இறுதிப்போட்டி வரை சென்று உலக கோப்பை கைக்கு வராமல் போனது. கடைசி நாள் வரை எந்த அணியின் கையும் ஓங்கி இருக்கவில்லை.

Related Stories: