பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் அகினோ மரணம்

மணிலா:  பிலிப்பைன்ஸ் நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்திய அகினோ குடும்பத்தில் இருந்து  வந்தவர் மூன்றாம் பெனிக்னோ அகினோ. கடந்த 2010 முதல் 2016 வரைஅதிபராக பதவி வகித்தார். பிலிப்பைன்ஸ் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்கோசின் ஆட்சியை கவிழ்த்து, ஜனநாயகத்தை கொண்டு வந்ததில் இவர் முக்கிய பங்கு வகித்தார். அதனால், உலகளவில் இவர் மிகவும் பிரபலமானார். தனது பதவி காலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டார். சீனாவுக்கு எதிரான கடுமையான நிலைபாட்டை பின்பற்றினார்.  இவருக்கு சீறுநீரகக் கோளாறும், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமானதால் மணிலாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

Related Stories: