ஆந்திராவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

ஹைதராபாத்: ஆந்திராவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் வீரியம் முந்தைய அலையைவிட அதிகமாக இருந்தது. மிக வேகத்தில் பரவியதுடன், உயிரிழப்பையும் அதிக அளவில் உண்டாக்கியது.

இதனால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. அதன்பின் பெரும்பாலான மாநிலங்கள் அந்தந்த மாநிலங்கள் நடத்தும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்தது.

ஆனால் ஆந்திர மாநில அரசு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்தது. ஆனால் தேர்வுக்கான தேதியை அறிவிக்காமல் இருந்தது. இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஒரு இறப்பு ஏற்பட்டால் கூட, நாங்கள் அரசையே பொறுப்பேற்கச் சொல்வோம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 4,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,464 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: