நதிநீர் இணைப்பு திட்டம் முறையான திட்டமிடல் இன்றி இருக்கிறது: தணிக்கை அறிக்கை

சென்னை: நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்தாததால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் கடல்நீர் ஊடுருவலை தடுத்தல் போன்ற நோக்கங்கள் நிறைவேறவில்லை என இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை அறிக்கை 2018ல் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த தமிழகத்தில் உள்ள 8 நதிகளை இணைக்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்துகிறது. இதில் இரு திட்டங்களுக்கு 2008ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தாமிரபரணி, கருமேனி ஆறு, நம்பி ஆறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட 6 திட்டங்கள் தொடக்க நிலையிலேயே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவற்றில் மூன்றுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு பயன்தரும் நதிநீர் திட்டம் முறையான திட்டமிடல் இன்றி தாமதமாக நிறைவேற்றப்படுவதால் நீர்வளம் குறைந்த பகுதிகளுக்கு பாசன வசதியை வழங்குதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் கடல்நீர் ஊடுருவலை தடுத்தல் போன்ற நோக்கங்கள் நிறைவேறவில்லை என தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>