தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை எதிரொலி!: சென்னையில் கொரோனா பரவல் 1.3% ஆக குறைந்தது..!!

சென்னை: சென்னையில் மேற்கொள்ளப்பட்ட நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் விகிதம் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா தொற்று பரவல் அதிகம் என்ற நிலை தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாறியுள்ளது. கடந்த மே மாதம் சென்னையில் 27.7  சதவீதமாக இருந்த தொற்று பரவல் விகிதம் தற்போது 1.3 ஆக குறைந்துள்ளது. புதன்கிழமை மட்டும் சென்னையில் 26 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அதில் 396 நபர்களுக்கு மட்டுமே தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சென்னையில் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 432 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 5 லட்சத்து 18 ஆயிரத்து 870 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,447 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் சென்னை கொரோனா தொற்று பரவளில் இருந்து மீள தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: