நாகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக புகார்

நாகை: நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் வங்கி ஊழியர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வங்கி ஊழியர் ராஜேஷ் உயிரிழந்தார்.

ஆக்சிஜன் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் ஒட்டுமொத்த ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் நல்ல நிலையில் இருந்த ராஜேஷ் உயிரிழந்ததாக அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில் கடந்த 12ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி தொடர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் கூறுவது போன்று ஆக்சிஜன் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: