கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் முன்னோடி ஜான் மெக்கஃபி ஸ்பெயின் நாட்டு சிறையில் தற்கொலை..!!

மாட்ரிட்: கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் முன்னோடியான ஜான் மெக்கஃபி ஸ்பெயின் நாட்டு சிறையில் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் மெக்கஃபி, கடந்த 2020ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கு செல்லும் வழியில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு பற்றி அமெரிக்க அரசின் புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்பெயின் கூறியது. இதையடுத்து பார்சிலோனா அருகே உள்ள ரைன்டு என்ற சிறையில் மெக்கஃபி அடைக்கப்பட்டார். இவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு ஸ்பெயின் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்க கூடாது என்று 75 வயதான ஜான் மெக்கஃபி தொடர்ந்து நீதிபதிகளிடம் முறையிட்டு வந்தார். ஆனால்  ஜான் மெக்கஃபியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க நீதிபதிகள் நேற்று ஒப்புதல் அளித்தனர். இந்நிலையில்  ஜான் மெக்கஃபி தன்னுடைய சிறை அறையிலேயே உயிரிழந்துவிட்டதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிடம் அவரை ஒப்படைக்க நீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய சில மணி நேரத்தில் ஜான் மெக்கஃபி தற்கொலை செய்துகொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜான் மெக்கஃபி மீது அமெரிக்காவில் வரி ஏய்ப்பு மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜான் மெக்கஃபிக்கு 30 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அச்சத்தில் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள்,ஜான் மெக்கஃபி, தற்கொலை ஏய்ப்பு மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜான் மெக்கஃபிக்கு 30 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அச்சத்தில் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: