முத்துப்பேட்டை பகுதியில் வெட்டப்படும் பனை மரங்கள்

* தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை 

முத்துப்பேட்டை : பனை மரங்களை பாதுக்காக்க அரசும் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் பனை மரத்தை வெட்டி பல்வேறு பகுதிக்கு ஏற்றுமதி செய்து வருமானம் பார்த்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் சமீபத்தில் திருவாரூர் கலெக்டர், திருத்துறைப்பூண்டி தாசில்தார் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனாலும், இப்பகுதியில் பனை மரங்கள் வெட்டப்படுவது நிறுத்தவில்லை. ஆகையால் முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் வெளிப்படையாகவே மரங்களை வெட்டி லாரிகளில் ஏற்றி வருகின்றனர். இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சமீபகாலமாக ஜாம்புவானோடை பகுதியில் அரசின் உத்தரவை மீறி சிலர் பனை மரங்களை வெட்டி லாரிகளில் ஏற்றி வருகின்றனர். இதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: