குமரி மாவட்டத்தில் விலை போகாமல் குவியும் பலாப்பழங்கள்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் பலாப்பழங்கள் அதிக அளவு விளைகிறது. இங்கு கிடைக்கும் பலாப்பழங்களை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம். கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டபோது குமரி மாவட்டத்தில் இருந்து பலாப்பழங்களை வேறு பகுதிக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

 இதுபோல் இந்த வருடமும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் பலா பழங்கள் குமரியில் தேங்கியுள்ளது. சில விவசாயிகள் மரத்தில் இருந்து பலா பழங்களை பறிக்காமல் அப்படியே போட்டுள்ளனர். இதனால் மரத்திலேயே பழுத்து, அழுகி கீழே விழும்நிலை இருந்து வருகிறது. பலர் தங்களது வீடுகளின் முன்பு பலா பழங்களை வைத்து விற்பனை செய்கின்றனர்.  இதனால் பலா பழவியாபாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இது குறித்து பலாப்பழ வியாபாரி ஒருவர் கூறியதாவது:  குமரி மாவட்டத்தில் மே, ஜூன் மாதங்கள்பலாப்பழ சீசன் ஆகும். குமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு  பலா பழங்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்லும். தற்போது ஊரடங்கு இருப்பதால் பலாபழங்கள் அதிக அளவு தேங்கியுள்ளது. இதுபோல் கடந்த வருடமும் பாதிப்பு ஏற்பட்டது. பலாப்பழம் கிலோ  R10 முதல்  R12க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கிலோ  R6க்கு விற்பனை செய்யப் படுகிறது.  இருப்பினும் மக்கள் வாங்க ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.இதனால் பலாப் பழங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: