நேற்று உயர்வு...இன்று சரிவு!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.35,520க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,440க்கும், சவரன் ரூ.35,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரடி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.35,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,455-க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகக் குறைந்து வரும் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து சவரன் ரூ.36 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. ஆனால் நேற்று பவுனுக்கு ரூ.129 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 640-க்கு விற்றது.  தேவையின் அடிப்படையில் தங்கத்தை வாங்குவதே தற்போதைய நிலையில் சிறந்ததாக இருக்கும் என்று நடுத்தர குடும்பத்தினரை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related Stories:

>