ஆடை அணிவது பற்றி சர்ச்சை கருத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரானை வறுத்து எடுக்கும் பெண்கள்

இஸ்லாமாபாத்:  பெண்களின் ஆடை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, பாகிஸ்தானில் பாலியல் வன்முறை அதிகமாக நடப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிவதால் ஆண்கள் பாலியல் ரீதியாக தூண்டப்படுகிறார்கள். அவ்வாறு இல்லை என்றால், ஆண்கள் ரோபோக்களை போல்தான் இருப்பார்கள்,’ என்று கூறினார். இந்த கருத்துக்கு பெண்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாகிஸ்தான் எதிர்கட்சியான ‘பாகிஸ்தான் மக்கள் கட்சி’யின் எம்பி ஷெர்ரி ரகுமான் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெண்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆடை அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலமாக, பெண்களுக்கு எதிரான அடக்குமுறையாளர்கள், குற்றவாளிகளுக்கு, அவர்களின் நடத்தையை நியாயப்படுத்துவதற்கான ஒரு காரணத்தை கூறுவதாக பிரதமர் அறியவில்லையா?, ’ என கூறியுள்ளார்.இந்தியாவில் வசித்து வரும் பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒரு ஆண் குறைவான ஆடையை அணியும்போது, பெண்கள் ரோபாக்களாக இருந்து விட முடியாது,’ என கூறி, இம்ரான்கான் சட்டையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கண்டித்துள்ளார்.

Related Stories: