பாக். தீவிரவாதி ஹபீஸ் வீடு அருகே குண்டு வெடிப்பில் 3 பேர் பலி

லாகூர்:  மும்பையில் கடந்த 2008ம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குலுக்கு, தடை செய்யப்பட்ட அமைப்பான ஜமாத்-உத்-தாவாவின் தலைவரும், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை நிறுவனருமான ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டுள்ளார். இவரை இந்தியா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்ததாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஹபீசுக்கு பதினைந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹2 லட்சம் அபராதம் விதித்தது. தற்போது ஹபீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், லாகூரில் உள்ள ஹபீஸ் சயீத் வீட்டிற்கு அருகே நேற்று மதியம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில், 3 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஒரு பைக்கில் வெடிப்பொருட்களுடன் ஒரு நபர் சுற்றி வந்ததாகவும், அவர் தான் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என்று ஒரு பெண் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: