மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பில் ஆபாச பேச்சு தனியார் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் மேலும் 2 ஆசிரியர்கள் சிக்குகின்றனர்: முதுகுளத்தூரில் பரபரப்பு

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தேரிருவேலி மும்முனை சந்திப்பில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியை சேர்ந்த அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகம்மது (36) மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பில் வரம்பு மீறி, பாலியல் ஆசைகளை தூண்டும் விதமாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுபற்றி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் ஹபீப் முகம்மதுவை,  முதுகுளத்தூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன. 15க்கும் மேற்பட்ட மாணவிகளிடம், தான் இப்படி முறை தவறி பேசியதாகவும், பாடம் படிக்க வீட்டிற்கு வரச்சொல்லி அத்து மீறியதாகவும் ஹபீப் முகம்மது ெதரிவித்துள்ளார்.

இதுபோன்று, மேலும் இரண்டு ஆசிரியர்கள் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் இரவு பரமக்குடியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி பரமக்குடி சப்-ஜெயிலில் அடைத்தனர். ஹபீப் முகம்மது கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவிகளிடம் அத்துமீறிய அந்த 2 ஆசிரியர்கள் குறித்து ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.  இதற்கிடையில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் ஹபீப் முகம்மதுவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இச்சம்பவம் குறித்த முழு விசாரணை, வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் காவல்துறை சார்பாக, கலெக்டர் சந்திரகலாவிடம் வழங்கப்பட்டது.

ஆசிரியர் சிக்கியது எப்படி?

ஆன்லைன் வகுப்பு நடத்தி வந்த ஆசிரியர் ஹபீப்முகம்மது, மாணவிகளின் போன் நம்பரை வைத்துக்கொண்டு பெற்றோர் உள்ளிட்ட மற்றவர்கள் அருகில் இருக்கிறார்களா என விசாரித்து விட்டு பேச துவங்குவாராம். அதன் பிறகு அக்கறையாக பேச துவங்கி, படிப்படியாக வரம்பு மீறி ஆபாசத்தின் உச்சம் வரை சென்று பேசி வந்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் அசிங்கம் எனக் கருதி, ஆத்திரமடைந்த சில மாணவிகள் அவரது நம்பரை பிளாக் செய்துள்ளனர். மேலும் இவரை சும்மா விடக்கூடாது என கருதிய சில மாணவிகள் கான்பரன்ஸிங் காலில் இருந்து கொண்டு, ஆசிரியர் அத்துமீறி பேசும் வரை பொறுமையாக கேட்டுக்கொண்டு, வாய்ஸ் ரெக்கார்ட் செய்துள்ளனர். அதனை சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டதால் வைரலாகி விட்டது.

Related Stories: