சேலம் அருகே வாகன தணிக்கையின்போது போலீசார் தாக்கியதில் விவசாயி பலி

* போலீஸ் ஸ்டேஷனை உறவினர்கள் முற்றுகை

* கொலை வழக்கில் எஸ்எஸ்ஐ அதிரடி கைது

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச்சாவடி பகுதியில், ஏத்தாப்பூர் போலீசார் ேநற்று முன்தினம் வாகன தணிக்ைகயில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரே பைக்கில் 3 பேர் வந்துள்ளனர். அவர்களை எஸ்எஸ்ஐ ெபரியசாமி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்ததில், எடப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன்(45) மற்றும் அவரது நண்பர்கள் சிவன்பாபு, ஜெயசங்கர் என்பது தெரியவந்தது. மேலும், 3 பேரும் போதையில் இருந்ததாக கூறி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முருகேசன் போலீசாருடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்எஸ்ஐ பெரியசாமி உள்ளிட்டோர், முருகேசனை லத்தியால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் மயங்கி சரிந்துள்ளார்.

உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி சிகிச்சைக்கு பின்பு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேல் சிகிச்ைசக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ேநற்று காலை முருகேசன் உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், ஏத்தாப்பூர் காவல்நிலையம் முன் திரண்டு, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், முருகேசனின் மனைவி அன்னக்கிளி(35), மகள்கள் ஜெயப்பிரியா(18), ஜெயப்பிருந்தா(17), மகன் கவிப்பிரியன்(13) மற்றும் உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்ைக எடுக்கும் வரை, அவரது உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

 சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, மாவட்ட எஸ்பி அபிநவ் ஆகியோர் நேரடி விசாரணை நடத்தினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காலை 8 மணி முதல் மாலை வரை பேச்சுவார்த்தை நீடித்தது. அப்போது, உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார். இதையடுத்து, முருகேசனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். முன்னதாக முருகேசன் சாவுக்கு காரணமான எஸ்எஸ்ஐ பெரியசாமி மீது, காவலர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழப்பு (176), கொலை செய்தல் (302) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து எஸ்எஸ்ஐ பெரியசாமி கைது செய்யப்படடார்.

மேலும் அவரை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., அபிநவ் உத்தரவிட்டார். மேலும் காவலர்கள் முருகன், திவாகர், பாலாஜி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

தவறு செய்தவர்கள் யாராக  இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: சட்டப்போரவையில்  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது சட்டமன்ற எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, போலீசால் தாக்கப்பட்ட முருகேசன்  உயிரிழந்த விவகாரம் குறித்து குறிப்பிட்டார். போலீஸ் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரிய அவர், குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம்,  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரினார். முதல்வர்  மு.க.ஸ்டாலின் கூறுகையில், இது பற்றி விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது.  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி இந்த அரசு உரிய நடவடிக்கையை  எடுக்கும் என்று கூறினார்.

குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிதி

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு காரணமான ஏத்தாப்பூர் காவல் துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலட்சியத்தில் சேலம் மாவட்ட போலீஸ்

திமுக அரசு பதவி ஏற்றபோது மாநிலம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவியிருந்தது. இதனால் உடனடியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது விதிமுறைகளை மீறி வாகனங்களில் சென்ற பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த முறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, போலீஸ் அதிகாரிகளை அழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களை எந்த வகையிலும் துன்புறுத்தக்கூடாது. விதிமுறைகளை மீறி பொதுமக்கள் செயல்பட்டால் கொரோனா குறித்த விழிப்புணர்வை கனிவாக அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் கொரோனா ஊரடங்கு தொடக்கத்தின்போது பொதுமக்கள் அதிக அளவில் வெளியில் சுற்றினர். ஆனாலும் பொதுமக்களிடம் போலீசார் கனிவான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், பொதுமக்கள் விதிமுறையை கடைபிடிக்காததால் கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்பட்டன. ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து விட்டது. அதேநேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள் தமிழகம் முழுவதும் சென்றுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் மட்டும் இதுபோன்ற நிகழ்ச்சி நடந்துள்ளது. எனவே, சேலம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், கீழ்மட்ட போலீசாருக்கு முறையான அறிவுரைகள் வழங்கினார்களா அல்லது அஜாக்கிரதையாக செயல்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வரின் ஆலோசனைகளை கேட்டு நடந்திருந்தால் இதுபோன்ற தவறுகள் நடந்திருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: