விளையாட்டு மைதானத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு பயிற்சி கஞ்சா வியாபாரி உட்பட 5 பேர் கைது

சென்னை: விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி வாலிபர்களுக்கு பயிற்சி அளித்த கஞ்சா வியாபாரி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன்(36). மெரினா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் நாங்கள் வசிக்கும் நடுக்குப்பம் 5வது தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிலர் அமர்ந்து கொண்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை கொளுத்தி மைதானத்தில் இருந்து மரத்தின் மீது விசியதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தினர், அதில், திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த கீதன்(23) என்பது தெரிந்தது. இவர் மீது கஞ்சா வழக்குகள் உள்ளன. கீதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் நண்பர்களான திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா குடிசை பகுதியை சேர்ந்த கமல் (எ) கமல்பாய்(37), ஜான்சன்(22), கார்த்திக்(23), அக்பர் அலி (எ) அப்பு(21) ஆகியோர் காலி மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து கொளுத்தி மரத்தின் மீது அடித்து பயிற்சி கொடுத்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் கஞ்சா வியாபாரி கீதன், கமல், ஜான்சன், கார்த்திக், அக்பர் அலி ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories: