கொரோனா சிகிச்சை பொருட்களுக்கு உலகிலேயே இந்தியாவில் தான் அதிக அளவு இறக்குமதி வரி : சீனா,அமெரிக்காவை மிஞ்சியது!!

டெல்லி : கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களுக்கு உலகிலேயே இந்தியாவில் தான் அதிக அளவு இறக்குமதி வரி விதிக்கப்படுவது ஆய்வு ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீனாவுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது 7 மடங்கு அதிகமாகவும் ஒன்றிய அரசு இயக்குமதி வரி விதிக்கிறது. மும்பையில் உள்ள இந்திரா காந்தி மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உதாரணமாக இறக்குமதியாகும் கொரோனா தொடர்பான சிகிச்சை பொருட்களுக்கு இந்திய அரசு 15.2% இறக்குமதி வரி விதிக்கிறது. சீனாவை ஒப்பிடும் போது இது 2 மடங்கு அதிகமாகும்.

அமெரிக்காவை ஒப்பிட்டால் இறக்குமதி வரி இந்தியாவில் 7 மடங்கு அதிகமாகி உள்ளது. வருவாய் குறைவாக ஊழல் ஆப்ஃகானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளை விட சுமார் 60% அளவிற்கு இந்தியாவில் இறக்குமதி வரி அதிகம் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.கிருமிநாசினி மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்களுக்கு இந்திய ஒன்றிய அரசு 55.8% இறக்குமதி வரி விதிக்கிறது. ஆனால் சீனாவிலோ வெறும் 11.5% தான் இறக்குமதி வரி. அமெரிக்காவிலோ மிகக்குறைவாக 2% மட்டுமே இறக்குமதி வரி. பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் கூட 17.5% மட்டுமே இறக்குமதி வரியாக வசூலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>