கொரோனா தொற்று பரவல் குறைவு எதிரொலி: மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் வருகை அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவ தொடங்கியது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையிலும் 500க்கு கீழ் கொரோனா எண்ணிக்கை குறைந்துள்ளது. இதேபோல் மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு தினசரி வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:  மத்திய மண்டலமான அரியலூரில் 71 பேர், கரூரில் 94 பேர், நாகையில் 107 பேர், திருவாரூரில் 92 பேர், தஞ்சையில் 372 பேர், பெரம்பலூரில் 33 பேர், புதுக்கோட்டையில் 78 பேர், திருச்சியில் 231 பேர் என மொத்தமாக 1.078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவை மாவட்டத்தில் நேற்று 870 பேர், திருப்பூர் மாவட்டத்தில் 434 பேர், ஈரோடு மாவட்டத்தில் 741 பேர், நீலகிரி மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நேற்று 831 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 491 பேருக்கு தொற்று உறுதியானது.

திண்டுக்கல்லில் 150 பேரும், மதுரையில் 185 பேரும், ராமநாதபுரத்தில் 100 பேரும், சிவகங்கையில் 95 பேரும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தேனியில் 153 பேரும், விருதுநகரில் 148 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். விருதுநகர் உள்பட 6 மாவட்டங்களில் மொத்தம் 831 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 36 பேர், பலி 7, ராணிப்பேட்டையில் பாதிப்பு 59 பேர், பலி 4, திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதிப்பு 61பேர் பலி 5, திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிப்பு 178 பேர், பலி 5.

கடலூர் மாவட்டத்தில் நேற்று சிகிச்சை முடிந்து 269 பேர் வீடு திரும்பினர். விழுப்புரம் மாவட்டத்தில் 24634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1302 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 123 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில்  91 பேருக்கும் நெல்லை மாவட்டத்தில் 48 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 41 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதையொட்டி பிற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதால் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: