விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒன்றரை மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட ஈரோடு மஞ்சள் மார்க்கெட்..!!

ஈரோடு: கொரோனா ஊரடங்கால் கடந்த 43 நாட்களாக மூடப்பட்டிருந்த ஈரோடு மஞ்சள் மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் உற்பத்திக்கு புகழ்பெற்ற ஈரோட்டில் 4 மையங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுவது வழக்கம். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடக விவசாயிகளும் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருவர். 

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 10ம் தேதி முதல் ஈரோடு மஞ்சள் சந்தை மூடப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு அளித்து மஞ்சள் சந்தையை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியதால் அவர்களின் கோரிக்கையை ஏற்று 43 நாட்களுக்கு பிறகு மஞ்சள் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு கோபி கூட்டுறவு சங்கம் என 4 இடங்களில் நடந்த மஞ்சள் ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். 

இதனிடையே ஏலத்தில் பங்கேற்கும் வியாபாரிகள், விவசாயிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகே வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த மாத விலையில் மாற்றம் எதுவும் இன்றி மஞ்சள் குவிண்டால் 6,500 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை விற்பனையானது. 

Related Stories: