மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை விரட்டிய ஒற்றை யானை

தேன்கனிக்கோட்டை : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர், மரகட்டா, தவரக்கரை வனப்பகுதியில் ஒற்றையானை சுற்றி வருகிறது. மேலும், அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று தாவரக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை ஒற்றை யானை விரட்டியது. அப்போது, அங்கிருந்த காளை மாடு ஒன்று ஒற்றை யானையை பார்த்து சீறிப்பாய்ந்தது. ஆனால், யானை ஆக்ரோஷமாக விரட்டியதால், காளையும், கூட்டத்தில் இருந்த மற்ற மாடுகளும் ஓட்டம் பிடித்தன. மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றவர்களும் தலைதெறிக்க ஓடினர்.

Related Stories:

>