திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கியில் ஜமாபந்தி துவக்கம்

திருமயம் : திருமயம் தாலுகாவில் ஜமாபந்தி 22 ம்தேதி தொடங்கியது.வருவாய்துறையில் ஒவ்வொரு ஆண்டும் நில வரி கணக்கு முடிக்கும் பணி ஜமாபந்தி என அழைக்கப்படுகிறது. ஜமாபந்தி அலுவலராக புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. அபி நயா நியமிக்கப்பட்டுள்ளார்.முதல்நாளான நேற்று( 22 ம் தேதி) செங்கீரை சரக கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. அதில் ஆர்.டி.ஓ. பயிற்சி சுஜிதா, தாசில்தார் சுரேஷ், துணை பிடிஓ. சேகர்,புள்ளியியல் ஆய்வாளர் சிவதானு,உதவி இயக்குநர்கள் உமா( வேளாண்மை), தீபாதேவி( தோட்டக்கலை) ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடமிருந்து 68 மனுக்கள் ஆன்லயனில் பெறப்பட்டன.

கடையக்குடி ஊராட்சி இந்திரா நகரில் வசிக்கும் குறவர்கள். 30 பேர் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கோரி ஆர்.டி.ஓ. விடம் மனு கொடுத்தனர். இந்த ஜமாபந்தியில்23 ம்தேதி கீழாநிலை, 24 ம்தேதி கோட்டூர், 25 ம்தேதி விராச்சிலை, 29 ம்தேதி திருமயம் பிர்கா கணக்குகளும் தணிக்கை செய்யப்படும். கரோனா தொற்று பரவல் காரணமாக அன்றைய தினம் குடிகள் மாநாடு நடைபெறாது.எனவே பொது மக்கள் வருவாய், நில அளவைத்துறை சம்பந்தமான கோரிக்கை மனுக்களை அரசின் இணையத்தளத்திற்கு இ.சேவை மையம் மூலமாக இலவசமாக அனுப்பலாம். திருமயம் விஏஓ ஜெகதீசன் நன்றி கூறினார்.

அறந்தாங்கி:

அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தியை முன்னிட்டு நேற்று பசலி 1430ம் ஆண்டு அத்தாணி சரக வருவாய் கணக்குகள் அறந்தாங்கி சப்கலெக்டர் ஆனந்த்மோகன் தலைமையில் அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங் முன்னிலையில் தணிக்கை செய்யப்பட்டது.முன்னதாக நில அளவைக் கருவிகளை சப்கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து நாகுடி, அரசர்குளம், பூவற்றக்குடி, சிலட்டூர் மற்றும் அறந்தாங்கி சரக வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. ஆன்லைன் வழியாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை குறைதீர் மனுக்கள் ஜமாபந்தி நிறைவு பெற்றவுடன் உரிய தீர்வு காணப்படும் என அறந்தாங்கி சப்கலெக்டர் ஆனந்த்மோகன் தெரிவித்தார்.

பொன்னமராவதி:

பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. .பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 1430ம் பசலி நேற்று சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு ஜமாபந்தி அலுவலர் ஜானகி தலைமையில் காரையூர் பிர்க்கா ஜமாபந்தி நேற்று தொடங்கியது .பசலிக்கான கிராம கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது. கொரோனோ காலம் என்பதால் ஜமாபந்தியில் நேரடியாக மனுக்கள் கொடுக்காமல் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வரும் 31ம் தேதி வரை தங்களது கோரிக்கை மனுக்களை அனுப்பலாம்.

இந்த மனுக்கள் அனைத்தும் தீர்வு காணப்பட்டு ஜமாபந்தி கணக்கில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் நேரடியாக மனுக்கள் அளிக்கவில்லை. இதில் பொதுமக்கள் இன்றி அலுவலர்களைக்கொண்டு நடந்தது. இதில் ஜமாபந்தி மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு, தாசில்தார் ஜெயபாரதி துணை தாசில்தார் பிரகாஷ், வேளாண்மை துணை இயக்குநர் ரவிச்சந்திரன். வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தீனவர்மன், காரையூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி, விஏஓக்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (23ம்தேதி) அரசமலை பிர்க்காவுக்கும், நாளை 24ம்தேதி பொன்னமராவதி பிர்க்காவிற்கு ஜமாபந்தி நடக்கின்றது.

Related Stories: