இறந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டோம்: சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டதும் கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கும் கிராம மக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டதும் அலறி அடித்து ஓட்டம் பிடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தடுப்பூசி கிடைக்காமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் தடுப்பூசி செலுத்திவரும் சுகாதாரத்துறை கண்டதும் கர்நாடகாவில் உள்ள காஞ்சஹரகள்ளி கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர். செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

யாதகிரி மாவட்டத்தில் உள்ள காஞ்சஹரகள்ளி கிராமத்தில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் 2 நாட்களில் வெறும் 150 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக கிராம பஞ்சாயத்து தலைவரை முன்னிறுத்தியும் கிராம மக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>