சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு வண்டிப்பண்ணையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

வத்திராயிருப்பு : சதுரகிரி மலைக்கோயிலில் வருகின்ற ஆக. 8ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா வரவுள்ளதால், தாணிப்பாறை அடிப்பகுதியான வண்டிப்பண்ணைப் பகுதியில் தகுந்த அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிாி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயில் உள்ளது. ெகாரோனா ஊரடங்கால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்ைல. ஆனால் சாமிக்கு பூஜைகள், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின்றி நடந்து வந்தது. இந்நிலையில் வருகின்ற ஆக. 6ம் தேதி பிரதோஷம், ஆக. 8ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா வரவுள்ளது. இவ்விழாவுக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில், தமிழகம் மட்டுமில்லாமல், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் அதிகம் வருவார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில் தாணிப்பாறை அடிப்பகுதியான வண்டிப்பண்ணைப் பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்கு குறிப்பிட்ட இடங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு பஸ் நிலையங்களாக செயல்பட்டன. ஏற்கனவே அமைக்கப்பட்ட இடத்தில், தற்போதும் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டால், கூடுதல் பஸ்கள் வந்தால் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை உடனடியாக எடுத்து, பஸ் ஸ்டாண்ட், வாகன காப்பகம், தங்கும் விடுதி, குளியலறை, கழிப்பறைகள் என அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். மேலும் மகாராஜபுரம் விலக்கிலிருந்து தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வரை செல்லக்கூடிய சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் பஸ்கள் அல்லது வாகனங்கள் விலகிச் செல்வதற்கு முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சாலையை இருவழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கு உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: