அதிமுக ஆட்சியில் அவசர, அவசரமாக போடப்பட்ட சாலையால் அல்லல்-சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை

திண்டுக்கல் : பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட பொன்மாந்துறை புதுப்பட்டிக்கு செல்லும் சாலையில் ஜல்லி கற்களை கொட்டி அப்படியே விட்டுவிட்டதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட பொன்மாந்துறை புதுப்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இச்சாலையை கடந்த அதிமுக ஆட்சியின் போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் அவசர அவசரமாக புதியதாக ரோடு போடுவதற்கு சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டு ஜல்லி கற்களை கொட்டி அப்படியே விட்டுவிட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் தினம்தோறும் தங்களின் நிலத்தில் விளைந்த காய்கறிகள் பூக்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களை திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கு இந்த ரோட்டை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

மேலும் பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் ரோடு போடுவதற்காக பறிக்கப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து கிடைப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பழுதாகி விடும் நிலைமை உள்ளது.

அதிமுக அரசின் தேர்தலையொட்டி அவசர அவசரமாக ரோடு போடப்பட்டு வந்தது. தற்போது தேர்தல் முடிந்தும் இதுவரை ரோடு போடாமல் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடைப்பதாலும் பாதசாரிகள் பொதுமக்கள் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ள நிலையில் இந்த தார் சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி சாலைப் பணியை விரைந்து சீரமைத்து உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: