கன மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

கூடலூர் :  கூடலூர், பாடந்துரை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. இதில் அங்குள்ள ஆலவயல், கணியம்வயல், மாரக்கரை, மல்லம் வயல், பாடந்துரை மர்கஸ் பகுதிகள் வழியாக ஓடும் சிற்றாறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.  இப்பகுதி வழியாக ஓடும் சிற்றாறுகள் கடந்த பல வருட காலமாக தூர்வாரப்படாத காரணத்தால் கடந்த வருடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

இந்த சிற்றோடைகளை மழைக்காலத்திற்கு முன் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என  இப்பகுதி அரசியல், பொது நல அமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் நேரில் மனு அளித்துள்ளதாகவும்,  தற்போது ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதாகவும், அடுத்து வரும் தொடர் மழை காலத்தில் மேலும் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>