திருவாரூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ.2.5 லட்சம் பணம் திருடிய வங்கி ஊழியர் கைது..!!

திருவாரூர்: திருவாரூரில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் திருடிய வங்கி ஊழியர் இளையராஜா என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கொடிக்கால்பாளையத்தால் சேர்ந்த இளையராஜா என்பவர் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். 

இவர் அங்குள்ள ஏ.டி.எம். லாக்கரின் சாவியை எடுத்து 2 லட்சத்து 5 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, கணக்கை சரிபார்த்த போது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது ஊழியர் இளையராஜா சிக்கினார். 

இதையடுத்து வங்கி காசாளர் அளித்த புகாரின் பேரில் வங்கி தற்காலிக ஊழியர் இளையராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். ஏ.டி.எம். திருட்டில் வங்கி ஊழியரே ஈடுபட்ட சம்பவம் திருவாரூரில்  பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

Related Stories: