தலைஞாயிறு ஊராட்சியில் 4,118 தொழிலாளர்களுடன் 100 நாள் வேலை தீவிரம்

வேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை வாய்ப்பில் ஒரேநாளில் 4 ஆயிரத்து 118 பேர் பணி செய்தனர்.

கொரோனா ஊரடங்குகாலத்தில் ஆண் பெண் விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்து உள்ள தலைஞாயிறு பகுதியில் வேலைவாய்ப்பின்றி இருந்து வந்தனர். இந்நிலையில் கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகள் அமல் படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைக்கு அழைப்பு விடப்பட்டது. இதில் 3,360 ஆண், 757 பெண் தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் வாய்ப்பில் வாய்க்கால் தூர்வாரும் பணியை தீவிரமாகவும் செய்தனர். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்ட நிலையில் ஓரிரு நாளில் தண்ணீர் தலைஞாயிறு வந்து அடையும் நிலையில், அரிச்சந்திர ஆற்றின் பிரதான வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா நிலையில் கிளை வாய்க்காலில் 100 நாள் பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

தலைஞாயிறு காடந்தேத்தி கீழ் மேலே வாய்க்காலில் நடைபெற்ற தூய்மைப் பணியை ஊராட்சி ஒன்றிய ஆணையர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ராஜகுமார் ஆகியோர் ஆய்வு செய்து பார்வையிட்டனர்.இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் செல்வராஜ் கூறியதாவது, காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வந்து சேர்ந்ததால் 100 நாள் வேலைவாய்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற 100 நாள் வேலை பணிகளுக்கு ஊதியம் அவரவர் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: