மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டதில் மத்திய மண்டலத்தில் 96 சதவீதம் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது

திருச்சி : மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் மத்திய மண்டலத்தில் 96 சதவீதம் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோ னா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் கடந்த 21ம் தேதி வரை 1 கோடியே 29 லட்சத்தி 19 ஆயிரத்து 530 தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 1 கோடியே 24 லட்சத்தி 61 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி 96 சதவீத தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதில் மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்திற்கு 4,66,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4,66,648 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி 100 சதவீத தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 1,29,670 தடுப்பூசியில் பொதுமக்களுக்கு 1,23,912ம், கரூர் மாவட்டத்தில் 1,61,910 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதில் பொதுமக்களுக்கு 1,67,358ம், அறந்தாங்கி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 91,680 தடுப்பூசியில் 85,921 தடுப்பூசிகளும், அரியலூரில் 1,13,650 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதில் 1,06,967 நபர்களுக்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 85,860 தடுப்பூசிகளில் 85,976 தடுப்பூசியும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 3,45,270 தடுப்பூசியில் 3,25,549 தடுப்பூசிகளும், நாகை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 1,87,500 தடுப்பூசிகளில் 1,67,823 தடுப்பூசிகளும், திருவாரூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 1,61,170 தடுப்பூசிகளில் 1,67, 902 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 17,120 கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருச்சியில் 2,880 ேடாஸ், அறந்தாங்கி, புதுக்கோட்ைட, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு 1120, கரூர் மாவட்டத்திற்கு 2560, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 3200, திருவாரூர் 2,240, நாகை மாவட்டத்திற்கு 1,760 தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: