நிதிநிலை சீரானதும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்: சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் விளக்கம்

சென்னை: நிதிநிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தற்போது குறைக்க முடியாது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதத்தில் பேசிய பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; ஒன்றிய அரசு பல மடங்கு வரியை உயர்த்தியதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். நிதிநிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தற்போது குறைக்க முடியாது. 2006-11 திமுக ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த போதும், 3 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை கலைஞர் குறைத்தார்.

முதலமைச்சர் வாக்குறுதி அடிப்படியில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைக்கப்படும். மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஒரு சதவீதத்தை கொரோனா 2-வது அலைக்காக செலவிட்டு வருகிறோம். ஏழை மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க 2 தவணைகளாக ரூ.2,000 தமிழ்நாடு அரசு வழங்கியது. இப்போதைக்கு நிதிநிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்று கூறுகிறோம். அரசின் நிதிநிலைமை சரியான பிறகு தான் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடியும். என கூறினார்.

இதனிடையே கச்சா எண்ணெய் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 75 டாலரை தாண்டி உள்ளதை சுட்டிக்காட்டி பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: