தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 6.72 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வருகை: மத்திய அரசு தகவல்

சென்னை: தமிழகத்துக்கு கூடுதலாக 6.72 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இன்று வர உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 29 லட்சத்து 22 ஆயிரம் 360 கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 24 லட்சத்து 61 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு கூடுதலாக 6.72 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இன்று வர உள்ளன. 

இதில் 2.05 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும், 4.67 லட்சம் கோவாக்சின் டோஸ்கள் தமிழகம் வர உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளன. நேற்று  ஐதராபாத்தில் இருந்து சரக்கு விமானத்தில் 45 பெட்டிகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 90 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது. மேலும் தமிழ்நாடு அரசும் தடுப்பூசிகளை தன்னிச்சையாக கொள்முதல் செய்து வருகிறது. 

Related Stories:

>