இங்கிலாந்தில் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் பாத சுவடுகள் கண்டுபிடிப்பு

பிரிட்டன்: 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் பாத சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் அழிந்து போன உயிரினமான 6 வகை டைனோசர் இனங்களின் பாத சுவடுகள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்த ஹேஸ்டிங்ஸ் மியூசியம் அண்ட் ஆர்ட் கேலரி, இதுகுறித்து ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில்; இந்த பாத சுவடானது உயர்ந்த மலைப்பகுதியிலும் கடற்கரைப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் புயல்களின் காரணமாக மணல், கடற்கரைப் பகுதி என தொடர்ந்து பாதித்து புதிய புதைபடிவங்களை வெளிவர செய்துகொண்டிருக்கிறது.

ஆனால் டைனோசர் பாத சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டது இது தான் முதல் முறை என்பதால் இது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து போவதற்கு முன் இந்த நாட்டில் உலவித் திரிந்திருக்கும் என தொல்லுயிரியல் துறை பேராசிரியர் டேவிட் மார்டில் தெரிவித்தார். மேலும் டைனோசர்கள் தற்போது ஒயிட் கிளிஃப்ஸ் ஆப் டோவர் இருக்கும் இடத்தில் உலவியிருக்கின்றன. அடுத்த முறை நீங்கள் அதனருகில் படகில் செல்லும் போது டைனோசர்கள் குறித்து கற்பனை செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர்களின் பாத சுவடுகள் ஃபோக்ஸ்டோன் மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாத சுவடுகள் பல்வேறு வகை டைனோசர்ளுடையது. அவை 110 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த டைனோசர்கள் ஆங்கிலோசார்ஸ் (Ankylosaurs)என்ற வகையைப் போன்றது. இதற்கு பார்ப்பதற்கு மிக கரடுமுரடு தோற்றத்தில் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>