நெல்லையில் தனியார் சிமெண்ட் ஆலை வளாகத்தில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!: போலீசார் விசாரணை..!!

நெல்லை: நெல்லையில் தனியார் சிமெண்ட் ஆலை வளாகத்தில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சங்கர் நகரில் இயங்கி வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளால் மிகவும் குறைவான தொழிலாளர்களுடன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

இதில் தொழிலாளர்கள் பலரை பணிநீக்கம் செய்தும் ஏராளமானோரை குறைந்த நாட்கள் மட்டுமே பணிக்கு வருமாறு ஆலை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் ஆலை வளாகத்தில் 5 இடங்களில் பைப் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாகவும் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் மர்மநபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளனர். 

புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் சம்பவ இடத்தில் அதிரடி ஆய்வு நடத்தி  2 பைப் வெடிகுண்டுகளை கண்டெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவற்றை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories:

>