தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பி.எம்.சி. எனப்படும் முந்தைய மாத கணக்கீட்டு முறையைப் பின்பற்றி மின்கட்டணம் செலுத்த வேண்டும். ஜூன் 15- ஆம் தேதி முதல் ஜூன் 30- ஆம் தேதி வரையிலான காலத்தில் கடந்தாண்டு ஜூன் மாத மின் கட்டணத்தைச் செலுத்தலாம். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு மின் கட்டண சலுகை பொருந்தும். 

புதிய நுகர்வோர், கணக்கீடு இல்லாதோர், கூடுதல் கட்டணம் என கருதுவோர் 2021 ஏப்ரல் மாத கட்டணத்தை செலுத்தலாம். 2021- ஆம் ஆண்டுக்கான உத்தேச கட்டணம் ஆகஸ்ட் மாதம் முறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படவில்லை.

Related Stories:

>