அரியலூர், கடலூர் மாவட்டத்தில் 15 இடங்களில் எண்ணெய் கிணறு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பம் நிராகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: அரியலூர், கடலூர் மாவட்டத்தில் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.   சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது பாபநாசம் ஜவாஹிருல்லா (மமக) பேசியதாவது:  3 வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற முதல்வர் அறிவிப்பை பாராட்டுகிறோம். தமிழக அரசின் வாழ்வாரத்தை சிதைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதிக்காது என்ற நம்பிக்கை உள்ளது. வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட சட்டத்தை அவமதிக்கும் வகையில் எண்ணெய் கிணறு அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்வது தொடர்பாக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் விண்ணப்பித்துள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்.  

அமைச்சர் தங்கம் தென்னரசு: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் அரியலூர், கடலூர் மாவட்டத்தில் 15 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம், அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. ஆனால், தற்போது அனுமதி கேட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அல்லாத பகுதிகள் என்பதால் இந்த இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைக்கலாம் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.  பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை தவிர்த்து மற்ற இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க விண்ணப்பித்தால், அதன் பாதிப்புகள் குறித்து கண்டறிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கண்டறிய விரைவில் வல்லுனர் குழு அமைக்கப்படும். அந்த குழு, மண்ணின் வளம், நிலத்தடி நீர் பிரச்சனை குறித்தும் ஆராயும்.

பொதுமக்களிடம் கருத்து கேட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கும். இது போன்ற மண் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை சமர்பிக்க குழு அமைக்கப்படும். கடலூரில் 10, அரியலூர் 5 இடங்களில் எண்ணெய் கிணறு அமைப்பது தொடர்பாக, ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தின் மீதான பரிசீலனைக்கு பிறகு, கடந்த 21ம் தேதி நிராகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலலை பாதிக்கும் மீத்தேன்ல ஷேல்கேஸ் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதை திட்டவட்டமாக ெதரிவித்து கொள்கிறேன்.

Related Stories: