பேரவையில் கலைஞரின் திருவுருவ படம்: திமுக எம்எல்ஏ சுந்தர் கோரிக்கை

சென்னை: கலைஞர் பிறந்த ஜூன் 3ம் தேதியை செம்மொழி தமிழ் தினமாக அறிவிக்க வேண்டும், சட்டமன்ற பேரவையில் கலைஞரின் திருவுருவ படத்தை திறக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ சுந்தர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உத்திரமேரூர் சுந்தர் (திமுக) பேசியதாவது:  திராவிட இயக்கத்தின் மகத்தான தலைவர் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரசு பதவியேற்றுள்ளது. இந்த மாமன்றத்தில் 60 ஆண்டுகள் அரும்பணியாற்றிய ஒரு ஒப்பற்ற தலைவராக இருந்தவர். நவீன தமிழகத்தின் சிற்பியாக விளங்கிய கலைஞர், 1957ல் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக பணியாற்றினார்.

1969ல் தமிழக முதலமைச்சர், 1977ல் எதிர்க்கட்சி தலைவர், 1989ல் மீண்டும் முதலமைச்சர், 1996ல் 4வது முறையாக முதலமைச்சர், 2006ல் 5வது முறையாக முதலமைச்சர்,2016ல் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அந்த அற்புதமான தலைவருக்கு நம்முடைய சட்டமன்ற பேரவையில் அவருடைய திருவுருவ படத்தை திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோலவே, அவர் பிறந்த ஜூன் 3ம் தேதியை செம்மொழி தமிழ் தினமாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: