சிமென்ட் விலை குறைப்பு

சட்டப்பேரவையில்  நேற்று அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பதில் அளித்து, தொழில்  துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, ”கட்டுமான பொருளான சிமென்ட்  விலை  என்பது இந்த ஆட்சி வந்த பிறகு உயரவில்லை. கடந்த மார்ச் மாதம் அதிமுக ஆட்சியில்   ஒரு மூட்டை சிமென்ட் ₹470ஆக இருந்தது. இப்போது 490ஆக உயர்ந்துள்ளது.இந்த விலை உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கக்கூடாது என்று முதலமைச்சர் எங்களையெல்லாம் அழைத்து, இந்த விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். சிமென்ட்,  கம்பி விலை உயர்வால் சாதாரண மக்களை பாதிக்கும். இந்த  விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு  உத்தரவிட்டார். இதன் காரணமாக, கடந்த 14ம் தேதி சிமென்ட் உற்பத்தியாளர்களை அழைத்து பேசினோம். விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அப்போது கூறினோம்.  

விலையை குறைத்துள்ளார்கள். தற்போது 460ஆக குறைந்துள்ளது. இன்னும்   குறைக்க வேண்டும், கிராமத்தில் உள்ள சாமானியன் வீடு கட்டும்போது  அவர்களுக்கு குறைந்த விலையில் சிமென்ட் கிடைக்க வேண்டும் என்று முதல்வர்   கேட்டுக் கொண்டார். இதுபற்றி மீண்டும் அவர்களிடம் பேசியுள்ளோம். விரைவில்   விலை குறைப்பு பற்றி அறிவிப்பு வெளியாகும். அதேபோன்று கம்பி விலை 1100  குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் விலையை குறைக்க அரசு எல்லா முயற்சிகளையும்   எடுத்து வருகிறது” என்றார்.

Related Stories: