மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

புதுடெல்லி: பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கிறது. மத்தியில் பாஜ ஆட்சி அமைந்தபின், கடந்த 2 ஆண்டாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை.  அடுத்த ஓராண்டில் 7 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, இந்த 7 மாநிலங்களில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.  இதுதொடர்பாக கடந்த ஒரு மாதமாக பிரதமர் மோடி தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரவையில் செய்யப்பட உள்ள மாற்றங்கள், புது முகங்களுக்கான இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று டெல்லி விரைந்துள்ளார். அவரது கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>