கோபா அமெரிக்கா கால்பந்து கால் இறுதியில் அர்ஜென்டினா

பிரேசிலியா: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் ஏ பிரிவு லீக் போட்டியில்,  அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்தது. பிரேசிலில் நடைபெறும்  கோபா கோப்பை கால்பந்து தொடரில் நேற்று  ஏ பிரிவு அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் நடந்தன.    பிரசேிலியா நகரில் அர்ஜென்டினா-பராகுவே அணிகள் மோதின.  பந்தை கடத்திச் செல்வதிலும், தன் வசம் வைத்திருப்பதிலும் பாராகுவே சிறப்பாக செயல்பட்டாலும், 10வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர்கள் மெஸ்ஸி,  டி மாரியோ தட்டித் தந்த பந்தை பாப்பு கோம்ஸ்  கோலாக்கி அசத்தினார். அதன்பிறகும் பராகுவேவின் கையில்தான் ஆட்டம் இருந்தது. அர்ஜென்டினா வீரர்கள்  போராடிதான் பராகுவே கோல் பகுதிக்கு அவ்வப்போது சென்று வந்தனர்.  

எனினும், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. அதனால்  அர்ஜென்டீனா 1-0 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்ததுடன் 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று கால் இறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்தது. பராகுவே முதல் தோல்வியை சந்தித்தது. குயாபா நகரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில்  உருகுவே-சிலி அணிகள் களம் கண்டன. விறுவிறுப்பான இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

மெஸ்ஸி 147

அர்ஜென்டினா அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில், ஜேவியர் மஸ்கெரானோவின் (147 போட்டி) சாதனையை கேப்டன் லியோனல் மெஸ்ஸி நேற்று சமன் செய்தார். அடுத்து பொலிவியாவுடன் நடக்கும் லீக் ஆட்டத்தின் மூலமாக அவர் மஸ்கெரானோவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை வசப்படுத்த உள்ளார்.

Related Stories: