மிரட்டும் பிலிப்பைன்ஸ் அதிபர் தடுப்பூசி போடாதவங்க இந்தியாவுக்கு ஓடிடுங்க

மணிலா: ‘‘தடுப்பூசி போடாதவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆகவே, தடுப்பூசி போட விருப்பமில்லாதவர்கள் இந்தியாவுக்கு ஓடி விடுங்கள்’’ என பிலிப்பைன்ஸ் அதிபர் கூறி உள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தொற்றினால் 13 லட்சத்து 67 ஆயிரத்து 894 பேர் பாதித்துள்ளனர். இதுவரை, 23,809 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். தலைநகர் மணிலா உள்பட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு மக்கள் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிலிப்பைன்சில் உள்ள 1.10 கோடி மக்கள் தொகையில் 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், இதுவரை 21 லட்சம் பேருக்கு மட்டுமே 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘‘நாட்டில் தற்போது கொரோனா தொற்று பிரச்னை இருந்து வருகிறது. தேசிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி போடாதவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். எனது கரங்களை கடுமையாக்கி விடாதீர்கள். உங்களுக்கு தடுப்பூசி போட விருப்பமில்லை என்றால், பிலிப்பைன்சில் இருக்காதீர்கள், இந்தியாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ எங்காவது ஓடிவிடுங்கள்’’ என கூறி உள்ளார்.

Related Stories:

>