எல்.முருகன் பேட்டி உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும், அதை சந்திக்க பாஜ தயாராக உள்ளது என பாஜ மாநில தலைவர் எல். முருகன் கூறினார். காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே வையாவூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட முன்களப்பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பாஜ மாநில தலைர் எல். முருகன் கலந்து கொண்டு,நிவாரணத் தொகுப்பை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்றத்தில், கவர்னர் உரை மு.க. ஸ்டாலின் புகழ்பாடும் உரையாகவே உள்ளது. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் அதில் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது.

செப்டம்பர் 15ம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. எப்போது, தேர்தல் நடத்தப்பட்டாலும், அதை சந்திக்க பாஜ தயாராக உள்ளது. தற்போதுள்ள கூட்டணி தொடரும் என்றார்.

Related Stories:

>