சொல்லிட்டாங்க...

கொரோனா மரணங்களை மத்திய அரசு மறைக்கிறது. உண்மையில் அரசு கூறும் இறப்பு எண்ணிக்கையை விட 5, 6 மடங்கு அதிகமாக இருக்கலாம். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரும் ஓஎன்ஜிசி நிறுவன விண்ணப்பங்களை தமிழக அரசு நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

மாநிலத்தில் பணம் செலவு செய்து அதிகாரத்திற்கு வந்துள்ள பாஜ, பணம் கொள்ளை அடிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது. - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

தமிழகத்தில் எப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டாலும் அதை சந்திக்க பாஜ தயாராக உள்ளது. - மாநில பாஜ தலைவர் எல்.முருகன்

Related Stories:

>