மாநிலத்தில் பெட்ரோல், டீசல் வரியை ஒன்றிய அரசு அபகரிப்பது தவறு: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது கீழ்வேளூர் உறுப்பினர் நாகைமாலி (சிபிஎம்) பேசியதாவது: மத்திய அரசு அலுவலகங்களில் இணை மொழியாக தமிழ்மொழியை அறிவிக்க கோரி ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் மாநில அரசின் வரி வருவாயை அபகரிக்கிறது. இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது ஆகும். மருத்துவம்- பொறியியல் படிப்புகளில் தமிழை பயிற்று மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். . ராஜா முத்தையா மருத்துவகல்லூரியில் மருத்துவ மாணவர்களிடம் தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கல்லூரியில் அரசு கட்டணத்தை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: