×

ஐ.நா.வை உலுக்கிய தந்தை - மகன் கொலை சம்பவம்; சாத்தான்குளத்தில் இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: கனிெமாழி எம்.பி அஞ்சலி

சாத்தான்குளம்: ஐ.நா.வை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சாத்தான்குளத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி கொரோனா ஊரடங்கை மீறி கடை திறந்ததாக, சாத்தான்குளம் போலீசாரால் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இரவு முழுவதும் தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் 2 பேரும் 22ம் தேதி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம், ஐ.நா. சபை வரை எதிரொலித்தது. இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில் பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், எஸ்எஸ்ஐ பால்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் சாத்தான்குளத்தில் இன்று  கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி சாத்தான்குளம் பஜாரில் பென்னிக்ஸ் கடையின் அருகில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் கனிமொழி எம்.பி., தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஜெயராஜ்- பென்னிக்ஸ் படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி, மாலையணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது கனிமொழி எம்.பி. கூறுகையில், ‘‘ ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழக முதல்வர் உறுதுணையாக இருப்பர். இதில் குற்றம் சாட்டப்பட்ட போலீசார், இந்த வழக்கை கேரளாவுக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது’’என்றார்.

Tags : GI UN ,Wai - Son ,Satanuku ,Kellenam M. B. , Tamil Nadu Chief Minister will support justice for Jayaraj-Phoenix death: Kanimozhi
× RELATED ஐ.நா. பாதுகாப்பில் குழுவில் 3 துணை...